TNPSC Thervupettagam
April 29 , 2024 18 days 127 0
  • இந்திய விமான நிலைய ஆணையம் ஆனது நாக்பூரில் (இஷான்) (ஒரே நாடு, ஒரே வான்வெளி) ஓர் இந்திய ஒத்திசைக்கப்பட்ட ஒற்றை வான்வெளி விமானப் போக்குவரத்து மேலாண்மைக்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்காக தனது ஈடுபாட்டு அறிக்கையினை ((EoI) சமர்ப்பிக்குமாறு அறிக்கை வெளியிட்டுள்ளது.
  • இந்த ஒருங்கிணைப்பானது செயல்பாடுகளை நெறிமுறைப்படுத்தவும், செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கவும், நெரிசலைக் குறைக்கவும், விமான நிறுவனங்களுக்கும் பயணிகளுக்கும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • தற்போது, இந்திய வான்வெளியானது நான்கு விமானத் தகவல் பகுதிகளாக பிரிக்கப் பட்டுள்ளது மற்றும் ஒவ்வொன்றும் தனித்தனியாக நிர்வகிக்கப்படுகின்ற சார் நிலை விமானத் தகவல் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
  • நாக்பூரில் உள்ள ஒரே ஆணையத்தின் கீழ் இந்த விமானத் தகவல் பகுதிகளை ஒருங்கிணைப்பது விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளில் செயல்திறன், பாதுகாப்பு மற்றும் தடையின்மை ஆகியவற்றை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • 2030 ஆம் ஆண்டில் உள்நாட்டு பயணிகள் போக்குவரத்து இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப் படுவதுடன், விமானப் போக்குவரத்துத் தொழில் துறை வளர்ச்சியில் உள்ள குறிப்பிடத்தக்க எழுச்சிக்கு மத்தியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்