நிதிசார் மென்பொருள் மற்றும் அமைப்புகள் (FSS) நிறுவனம் ஆனது இந்தியா, மத்திய கிழக்கு, ஆசியா பசிபிக் மற்றும் தென்னாப்பிரிக்கா பகுதியிலிருந்து ISO IEC 42001 சான்றிதழ் முன்னணி அந்தஸ்தைப் பெற்ற முதல் கொடுப்பனவு நிறுவனமாக மாறியுள்ளது.
ISO IEC 42001 என்பது செயற்கை நுண்ணறிவு மேலாண்மை அமைப்புகளுக்கான ஒரு உலகளாவிய தரநிலையாகும்.
இந்தச் சான்றிதழானது, செயற்கை நுண்ணறிவை நிர்வகிப்பதற்காக FSS நிறுவனம் ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் நிறுவனம் முழுவதுமான அமைப்பைப் பின்பற்றுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.
மோசடியைக் கண்டறிதல், பரிவர்த்தனைக் கண்காணிப்பு, தகராறுகளை கையாளுதல் மற்றும் தானியக்கம் ஆகியவற்றிற்கு FSS நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது.
இந்தத் தரநிலையானது, செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டில் நேர்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் இடர் கட்டுப்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
இந்தச் சான்றிதழ் TUV SUD நிறுவனத்தால் மதிப்பீடு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.