January 5 , 2026
8 days
73
- திரிபுரா மாநிலப் பொதிகள் அனுப்பும் மையம் (SLDC) ISO/IEC 27001:2022 சான்றிதழைப் பெற்றது.
- வடகிழக்கு இந்தியாவில் இந்த இணையவெளிப் பாதுகாப்பு சான்றிதழைப் பெற்ற முதல் பொதி அனுப்பும் மையம் இதுவாகும்.
- இந்த மையம் திரிபுரா மாநில மின்சாரக் கழக லிமிடெட் (TSECL) நிறுவனத்தின் கீழ் செயல்படுகிறது.
- ISO/IEC 27001:2022 என்பது தகவல் பாதுகாப்பு மேலாண்மை அமைப்புகளுக்கான (ISMS) சர்வதேச தரநிலையாகும்.
- இந்தச் சான்றிதழ் மின் பகிர்மான கட்டமைப்புக் கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் தரவு வலையமைப்புகளின் இணையவெளிப் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது.
- இது முக்கியமான மின்சார உள்கட்டமைப்பு மற்றும் தேசிய மின் பகிர்மான கட்டமைப்பு நிலைத்தன்மையின் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.
Post Views:
73