ISPRL மற்றும் ADNOC-க்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
November 19 , 2018 2454 days 731 0
அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனமானது (Abu Dhabi National Oil Company -ADNOC) சமீபத்தில் இந்திய யுக்திசார் பெட்ரோலிய இருப்பு நிறுவனங்களுடன் (Indian Strategic Petroleum Reserves Ltd- ISPRL) புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் அபுதாபியில் கையொப்பமிட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள படூர் நிலத்தடி சேமிப்பு வசதியில் ADNOC-ன் கச்சா எண்ணெயை சேமிப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வது குறித்ததாகும்.
இந்தியாவின் யுக்திசார் பெட்ரோலிய இருப்புத் திட்டத்தில் கச்சா எண்ணெய் மூலம் முதலீடு செய்யும் ஒரே வெளிநாட்டு எண்ணெய் & எரிவாயு நிறுவனம் ADNOC ஆகும்.
ISPRL ஆனது இந்திய அரசிற்குச் சொந்தமான நிறுவனமாகும். நொய்டாவைத் தலைமையகமாகக் கொண்ட இந்நிறுவனமானது அவசரகாலத் தேவைகளுக்காக கச்சா எண்ணெயினை சேமிப்பதற்காக உத்தரவிடப்பட்டு இருக்கின்றது.