TNPSC Thervupettagam
July 4 , 2025 14 hrs 0 min 10 0
  • குழுத் தலைவர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) அறிவியல் பரிசோதனையை மேற்கொண்ட முதல் இந்தியர் என்ற பெருமையினைப் பெற்று உள்ளார்.
  • அவரது முதலாவது ஆய்வானது, நீண்ட கால விண்வெளிப் பயணங்களில் ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ள நுண் ஈர்ப்பு விசை காரணமான "மயோஜெனிசிஸ்" எனப்படும் தசை திசுவாக்க செயல்முறையில் தசை இழப்பு குறித்து ஆராய்கிறது.
  • இந்தக் கண்டுபிடிப்புகள் ஆனது, எதிர்காலத்தில் நிலவு/செவ்வாய்களுக்கு பயணம் மேற்கொள்ளும் எதிர்கால விண்வெளி வீரர்களுக்கு உதவக் கூடும் என்பதோடு மேலும் பூமியில் தசை நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் பயனளிக்கும்.
  • விண்வெளியில் மனித மூளையில் உள்ள ரத்த ஓட்டத்தையும் அந்தக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர் என்ற ஒரு நிலையில் இது பூமியில் பக்கவாதம் மற்றும் இரத்த அழுத்தச் சிகிச்சைகளுக்கு உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்