இந்திய விண்வெளிச் சூழ்நிலை விழிப்புணர்வு அறிக்கை (ISSAR) 2025 என்ற ஒரு அறிக்கையினை இஸ்ரோ வெளியிட்டது.
இந்த அறிக்கை செயற்கைக்கோள்கள், விண்வெளி பயணங்கள் மற்றும் விண்வெளிச் சூழல் குறித்த வருடாந்திர தரவுகளை வழங்குகிறது.
2025 ஆம் ஆண்டில், உலகளவில் 315 வெற்றிகரமான ஏவுதல்கள் மூலம் 4,198 செயல் பாட்டுச் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டன.
தாழ்வான புவி சுற்றுப்பாதையில் சுமார் 1.6 லட்சம் நெருக்கமான அணுகுமுறை எச்சரிக்கைகளுடன் அதிகரித்து வரும் விண்வெளி நெரிசலை இது எடுத்துக் காட்டுகிறது.
இந்தியா 144 விண்கலங்கள் மற்றும் சந்திரயான்-2 உலாவி மற்றும் ஆதித்யா-L1 போன்ற செயலில் உள்ள பயணங்களைக் கொண்டுள்ளது.
விண்வெளிப் பாதுகாப்பிற்கான நேத்ரா (விண்வெளிப் பொருட்களைக் கண்காணித்தல் மற்றும் பகுப்பாய்வு செய்வதற்கான வலையமைப்பு) மற்றும் குப்பைகள் இல்லாத விண்வெளிப் பயணம் போன்ற இந்தியாவின் முயற்சிகளையும் இது குறிப்பிடுகிறது.