கத்தாரின் தோஹாவில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு ISSF (சர்வதேச துப்பாக்கி சுடும் விளையாட்டு கூட்டமைப்பு) உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா ஆறு பதக்கங்களை வென்றது.
இந்தியாவின் பதக்கப் பட்டியலில் இரண்டு தங்கங்கள், மூன்று வெள்ளிகள் மற்றும் ஒரு வெண்கலம் அடங்கும்.
ஒட்டு மொத்தப் பதக்கப் பட்டியலில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
சிம்ரன்பிரீத் கவுர் பிரார் (மகளிர் 25 மீட்டர் சுழல் துப்பாக்கிச் சுடுதல்/பிஸ்டல்) மற்றும் சுருச்சி போகட் (மகளிர் 10 மீட்டர் காற்றுப் பீச்சுக் குழல் துப்பாக்கிச் சுடுதல்/ஏர் பிஸ்டல்) தங்கப் பதக்கங்களை வென்றனர்.
சைன்யம், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (ஆடவர் 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல்-3 நிலை) மற்றும் அனிஷ் பன்வாலா (ஆடவர் 25 மீட்டர் விரைவு சுழல் துப்பாக்கிச் சுடுதல்) வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
சாம்ராட் ராணா (ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல்) வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.