TNPSC Thervupettagam

ISSF இளையோர் உலகக் கோப்பைப் போட்டி

May 18 , 2022 1496 days 896 0
  • ஜெர்மனியின் சுஹல் நகரில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு போட்டிக் கூட்டமைப்பின் இளையோர் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய துப்பாக்கிச் சுடும் வீரர்களான ஈஷா சிங் மற்றும் சவுரப் சவுத்ரி ஆகியோர் கலப்பு அணி துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றனர்.
  • இதே போட்டியில் பாலக் மற்றும் சரப்ஜோத் சிங் ஆகியோர் கொண்ட அணியினர் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.
  • 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு குழுப் போட்டியில் ரமிதா மற்றும் பார்த் மகிஜா ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.
  • இந்திய அணி இதுவரை நான்கு தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்