TNPSC Thervupettagam

ISSF உலகக் கோப்பை போட்டி 2025

December 11 , 2025 16 days 93 0
  • கத்தாரின் தோஹாவில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு ISSF (சர்வதேச துப்பாக்கி சுடும் விளையாட்டு கூட்டமைப்பு) உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா ஆறு பதக்கங்களை வென்றது.
  • இந்தியாவின் பதக்கப் பட்டியலில் இரண்டு தங்கங்கள், மூன்று வெள்ளிகள் மற்றும் ஒரு வெண்கலம் அடங்கும்.
  • ஒட்டு மொத்தப் பதக்கப் பட்டியலில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
  • சிம்ரன்பிரீத் கவுர் பிரார் (மகளிர் 25 மீட்டர் சுழல் துப்பாக்கிச் சுடுதல்/பிஸ்டல்) மற்றும் சுருச்சி போகட் (மகளிர் 10 மீட்டர் காற்றுப் பீச்சுக் குழல் துப்பாக்கிச் சுடுதல்/ஏர் பிஸ்டல்) தங்கப் பதக்கங்களை வென்றனர்.
  • சைன்யம், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (ஆடவர் 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல்-3 நிலை) மற்றும் அனிஷ் பன்வாலா (ஆடவர் 25 மீட்டர் விரைவு சுழல் துப்பாக்கிச் சுடுதல்) வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
  • சாம்ராட் ராணா (ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல்) வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்