Umagine 2026 நிகழ்வில், தமிழ்நாட்டில் குவாண்டம் கணினித் திட்டங்களைத் தொடங்குவதற்காக, iTNT மையம் ஆனது ஜெர்மனியில் உள்ள XeedQ GmbH உடன் ஒரு உத்தேச ஒப்புதல் ஆவணத்தில் (LoI) கையெழுத்திட்டது.
முதல் கட்டத்தில், மாணவர்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் XeedQ நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட 4-கியூபிட் குவாண்டம் கணினியை தொலைவிலிருந்து அணுக இயலும்.
இந்தத் திட்டம் தமிழக அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் பொது-தனியார் முன்னெடுப்பான iTNT மையத்தினால் நடத்தப்படும்.
இந்த மையம் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள iTNT மையத்தில் அமைந்திருக்கும்.
XeedQ GmbH ஆனது குவாண்டம் வன்பொருள், தொழில்நுட்ப ஆதரவு மற்றும் கற்றல் உதவியை வழங்கும்.
இரண்டாம் கட்டத்தில், அதன் புதுமை சூழல் அமைப்பிற்கான இயற்பியல் குவாண்டம் கணினியை வழங்கும் முதல் இந்திய மாநிலமாக தமிழ்நாடு மாறக் கூடும்.