TNPSC Thervupettagam

iTNT–XeedQ குவாண்டம் ஒப்பந்தம்

January 15 , 2026 7 days 49 0
  • Umagine 2026 நிகழ்வில், தமிழ்நாட்டில் குவாண்டம் கணினித் திட்டங்களைத் தொடங்குவதற்காக, iTNT மையம் ஆனது ஜெர்மனியில் உள்ள XeedQ GmbH உடன் ஒரு உத்தேச ஒப்புதல் ஆவணத்தில் (LoI) கையெழுத்திட்டது.
  • முதல் கட்டத்தில், மாணவர்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் XeedQ நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட 4-கியூபிட் குவாண்டம் கணினியை தொலைவிலிருந்து அணுக இயலும்.
  • இந்தத் திட்டம் தமிழக அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் பொது-தனியார் முன்னெடுப்பான iTNT மையத்தினால் நடத்தப்படும்.
  • இந்த மையம் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள iTNT மையத்தில் அமைந்திருக்கும்.
  • XeedQ GmbH ஆனது குவாண்டம் வன்பொருள், தொழில்நுட்ப ஆதரவு மற்றும் கற்றல் உதவியை வழங்கும்.
  • இரண்டாம் கட்டத்தில், அதன் புதுமை சூழல் அமைப்பிற்கான இயற்பியல் குவாண்டம் கணினியை வழங்கும் முதல் இந்திய மாநிலமாக தமிழ்நாடு மாறக் கூடும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்