உணவு மற்றும் வேளாண்மைக்கான தாவர மரபணு வளங்களுக்கான சர்வதேச ஒப்பந்தத்தின் (ITPGRFA) நிர்வாகக் குழுவின் 11வது அமர்வு ஆனது பெருவின் லிமாவில் நிறைவடைந்தது.
உலகின் தாவர அடிப்படையிலான உணவு முறையில் சுமார் 80 சதவீதத்தினைக் கொண்டுள்ள 35 முக்கிய உணவுப் பயிர்கள் மற்றும் 29 தீவனப் பயிர்களின் அணுகல் மற்றும் நன்மைப் பகிர்வை பல்தரப்பு அமைப்பு (MLS) நிர்வகிக்கிறது.
தாவர மரபணுப் பொருட்களின் பரிமாற்றத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் வணிக நன்மைகளின் நியாயமான பகிர்வை உறுதி செய்வதற்கும் திருத்தப்பட்டத் தரநிலைப் பொருள் பரிமாற்ற ஒப்பந்தத்தை (SMTA) ஏற்றுக் கொள்வது குறித்து இந்த அமர்வு விவாதித்தது.
2001 ஆம் ஆண்டில் உணவு மற்றும் வேளாண் அமைப்பால் (FAO) ஏற்றுக் கொள்ளப் பட்ட ITPGRFA ஆனது 2004 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
இது பயிர்களின் மரபணு பன்முகத் தன்மைக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் சட்டப் பூர்வ சர்வதேச ஒப்பந்தமாகும் என்பதோடு, மேலும் இதில் 154 நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்பினர்களாக உள்ளன.