TNPSC Thervupettagam
December 4 , 2025 8 days 65 0
  • உணவு மற்றும் வேளாண்மைக்கான தாவர மரபணு வளங்களுக்கான சர்வதேச ஒப்பந்தத்தின் (ITPGRFA) நிர்வாகக் குழுவின் 11வது அமர்வு ஆனது பெருவின் லிமாவில் நிறைவடைந்தது.
  • உலகின் தாவர அடிப்படையிலான உணவு முறையில் சுமார் 80 சதவீதத்தினைக் கொண்டுள்ள 35 முக்கிய உணவுப் பயிர்கள் மற்றும் 29 தீவனப் பயிர்களின் அணுகல் மற்றும் நன்மைப் பகிர்வை பல்தரப்பு அமைப்பு (MLS) நிர்வகிக்கிறது.
  • தாவர மரபணுப் பொருட்களின் பரிமாற்றத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் வணிக நன்மைகளின் நியாயமான பகிர்வை உறுதி செய்வதற்கும் திருத்தப்பட்டத் தரநிலைப் பொருள் பரிமாற்ற ஒப்பந்தத்தை (SMTA) ஏற்றுக் கொள்வது குறித்து இந்த அமர்வு விவாதித்தது.
  • 2001 ஆம் ஆண்டில் உணவு மற்றும் வேளாண் அமைப்பால் (FAO) ஏற்றுக் கொள்ளப் பட்ட ITPGRFA ஆனது 2004 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
  • இது பயிர்களின் மரபணு பன்முகத் தன்மைக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் சட்டப் பூர்வ சர்வதேச ஒப்பந்தமாகும் என்பதோடு, மேலும் இதில் 154 நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்பினர்களாக உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்