கத்தாரின் தோஹாவில் நடைபெற்ற சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU) முழு அதிகார மாநாட்டில் 151 வாக்குகளைப் பெற்று, 2027–2030 ஆம் ஆண்டு காலகட்டத்திற்கான ITU சபைக்கு இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ITU சபை நான்கு ஆண்டு காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 48 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.
1865-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ITU, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளது; இது 1947-ஆம் ஆண்டில் ஐ.நா.வின் சிறப்பு முகமையாக மாறியது.
ITU-வில் 194 உறுப்பு நாடுகளும், 1,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற அமைப்புகளும் உறுப்பினர்களாக உள்ளன.
ITU ஆனது ITU-R (வானொலித் தொடர்பு), ITU-T (தொலைத்தொடர்பு தரப்படுத்தல்) மற்றும் ITU-D (தொலைத்தொடர்பு மேம்பாடு) ஆகிய மூன்று முக்கியப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.
இந்தியா 1869 ஆம் ஆண்டு முதல் ITU உறுப்பினராகவும், 1952 ஆம் ஆண்டு முதல் அதன் சபை உறுப்பினராகவும் இருந்து வருகிறது.