IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் இமயமலை மருத்துவ தாவரங்கள்
December 16 , 2022 990 days 553 0
இமயமலையில் காணப்படும் மூன்று மருத்துவத் தாவர இனங்கள் ஆனது, சமீபத்திய மதிப்பீட்டைத் தொடர்ந்து IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
மீசோட்ரோபிஸ் பெல்லிடா 'மிக அருகி வரும் இனம்' என்றும், ஃபிரிடிலோரியா சிர்ஹோசா 'பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள இனம்' என்றும், டேக்ட்டிலோர்ஹிசா ஹட்டாகிரியா 'அருகி வரும் இனம்' என்றும் மதிப்பிடப்பட்டு உள்ளன.
மீசோட்ரோபிஸ் பெல்லிடா இனமானது, பொதுவாக பட்வா என்று அழைக்கப் படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் மட்டுமே காணப்படுகிற இது ஒரு குறிப்பிட்டப் பகுதியில் மட்டுமே பரவிக் காணப்படும் நிலையான ஒரு புதர் வகைத் தாவரமாகும்.
ஃபிரிடிலோரியா சிர்ஹோசா (இமாலய ஃபிரிடிலோரி) என்பது ஒரு நிரந்தரமாக பூக்கின்ற ஒரு வித்திலை மூலிகைத் தாவரமாகும்.
இந்த மதிப்பீட்டுக் காலத்தில் (22 முதல் 26 ஆண்டுகள்) அவற்றின் எண்ணிக்கையில் குறைந்தது 30% குறைந்துள்ளன.
IUCN அமைப்பின் தரவுகளின்படி, இந்தியாவில் பகுப்பாய்வு செய்யப்பட்ட 239 புதிய இனங்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதில் 29 இனங்கள் அச்சுறுத்தல் நிலையில் உள்ள இனங்களாகும்.