IUCN ஆனது 1840 புதிய உயிரினங்களை சிவப்புப் பட்டியலில் அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் பிரிவில் சேர்ப்பு
December 14 , 2019 2081 days 718 0
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கமானது (International Union for the Conservation of Nature - IUCN) அதன் புதுப்பிக்கப்பட்ட “அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களைக் கொண்ட சிவப்புப் பட்டியலில்” சுமார் 1,840 புதிய உயிரினங்களைச் சேர்த்துள்ளது.
அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களைக் கொண்ட சிவப்புப் பட்டியல் என்பது அழிந்து போகும் அபாயமுள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு பட்டியலாகும்.
இந்தக் குழுவானது தனது புதுப்பிக்கப்பட்ட சிவப்புப் பட்டியலை ஸ்பெயினின் மாட்ரிட்டில் நடந்த COP25 காலநிலை பேச்சுவார்த்தையின் போது வெளியிட்டது.
சமீபத்திய திருத்தமானது வெப்பநிலை அதிகரித்து வருவதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் உள்ள 37% நன்னீர் மீன் இனங்கள் அழிந்து போகும் அபாயத்தில் உள்ளன என்பதைக் காட்டுகின்றது.