IUCN சிவப்புப் பட்டியலின் அச்சுறுத்தல் நிலையிலுள்ள இனங்களில் புதிய பதிவு
December 15 , 2021 1350 days 725 0
IUCN சிவப்புப் பட்டியலில் உள்ள அழியும் அபாயத்தில் உள்ள உயிரினங்களின் எண்ணிக்கையானது முதல்முறையாக 40,000 என்ற அளவினைக் கடந்துள்ளது.
சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் சிவப்புப் பட்டியலிலுள்ள அச்சுறுத்தல் நிலையிலுள்ள இனங்கள் குறித்த தகவல் புதுப்பிக்கப்பட்டதன் படி, ஈரநிலங்கள் அழிக்கப்படுவது உலகளவில் தட்டான்பூச்சிகளின் (தும்பி) எண்ணிக்கையைக் குறைத்துள்ளது.
அவை இனப்பெருக்கம் செய்யும் பகுதிகளான சதுப்பு நிலங்கள், ஈரநிலங்கள் மற்றும் பரந்து விரிந்து ஓடும் ஆறுகள் போன்றவை பரவலாக அழிக்கப்படுவதால் அவற்றின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படுகிறது.
உலகளவிலான நிலைத்தன்மையற்ற வேளாண்மை மற்றும் நகரமயமாக்கலின் விரிவாக்கத்தினாலேயே பெரும்பாலும் இந்த இழப்புகள் தூண்டப்படுகின்றன.
இப்பட்டியலில் தற்போதுள்ள 1,42,577 இனங்களில் 40,084 இனங்கள் அழிந்து வரும் ஒரு அபாயத்தில் உள்ளன.