பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான IUCN உலக ஆணையம் (WCPA) ஆனது "பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பருவநிலை மாற்றத் தணிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துதல்" என்ற அறிக்கையை வெளியிட்டது.
பாதுகாக்கப்பட்ட மற்றும் வளங்காக்கப்பட்ட பகுதிகள் (PCAs) ஆனது பல்லுயிர் பெருக்கம், கலாச்சார வளங்களைப் பாதுகாக்கின்றன மற்றும் நிலையான மேம்பாட்டினை ஆதரிக்கின்றன.
PCA பகுதிகள் ஆனது கார்பன் டை ஆக்சைடை அகற்றவும், கார்பன் உமிழ்வினைத் தடுக்கவும் உதவுகின்றன, மேலும் அவற்றின் வகையைப் பொறுத்து பெரிய அளவிலான கார்பன் அகற்றலை செயல்படுத்தக் கூடும்.
30% நிலத்தைப் பாதுகாப்பது 500 பில்லியன் டன் கார்பனை அடைத்து வைக்கக்கூடும், மேலும் 30% பெருங்கடல்களைப் பாதுகாப்பது பாரிசு உடன்படிக்கைக்குத் தேவையான 20% உமிழ்வைக் குறைக்கலாம்.