துவாலு நாடானது IUCN அமைப்பின் 90வது உறுப்பினராக மாறியுள்ளது.
இது மேற்கு-மத்திய பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு சிறிய பாலினேசிய தீவு நாடு ஆகும்.
துவாலு வெறும் 26 சதுர கிலோமீட்டர் அளவிலான நிலப்பரப்புடன் 676 கிலோமீட்டர் பரப்பளவிலான 9 வளைய வடிவப் பவளப் பாறைத் தீவுகள்/அட்டோல்கள் மற்றும் பவளப்பாறைத் தீவுகளைக் கொண்டுள்ளது.
துவாலுவின் தலைநகரம் ஃபனாஃபுட்டி அட்டோலில் அமைந்துள்ள வையாகு ஆகும்.
இந்தத் தீவுகள் கடல் மட்டத்திலிருந்து 4 முதல் 5 மீட்டர் உயரத்தில், மிகவும் தாழ்வான மட்டத்தில் அமைந்தவையாகும்.
துவாலுவில் ஆறுகள் இல்லை, இது மழைநீர் மற்றும் நன்னீர் ஊற்றுகளை/கிணறுகளை சார்ந்துள்ளது.
துவாலு ஆனது பவளப்பாறைகள் மற்றும் புலம்பெயர்ந்த இனங்கள் உட்பட அதன் வளமான கடல் சார் பல்லுயிர் பெருக்கத்திற்கு பெயர் பெற்றது.