IUCN அமைப்பின் 4வது உலக பாரம்பரியக் கண்ணோட்ட அறிக்கையானது அபுதாபியில் உள்ள IUCN உலக வளங்காப்பு மாநாட்டில் வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையானது, இயற்கை மற்றும் கலப்பு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களங்களின் பாதுகாப்பு நிலையை ஒவ்வொரு 3 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மதிப்பிடும் சர்வதேச இயற்கை வளங்காப்பு ஒன்றியத்தின் உலகளாவிய மதிப்பீடு ஆகும்.
80 சதவீதத்திற்கும் மேற்பட்ட இயற்கை பாரம்பரியக் களங்கள் பவளப்பாறை வெளிர்தல், பனிப்பாறை உருகுதல் மற்றும் காட்டுத்தீ போன்ற நேரடி பருவநிலை அபாயங்களை எதிர்கொள்கின்றன.
உலகளாவிய நிலப்பரப்பு கார்பனில் தோராயமாக 10% ஆனது, இயற்கை உலகப் பாரம்பரியத் தளங்களில் சேமிக்கப்படுகிறது என்பதோடு இது பருவநிலை மீதான ஒழுங்குமுறையை ஆதரிக்கிறது.
மோதல், மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் பலவீனம் காரணமாக 15 தளங்கள் "ஆபத்தில் உள்ள உலகப் பாரம்பரியத் தளங்கள்" பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டன.
இந்தியாவில், உலகளாவிய இயற்கைப் பாரம்பரியப் பகுதியில் 1.5 சதவீதத்திற்கும் அதிகமான பகுதியை உள்ளடக்கிய 7 இயற்கை மற்றும் கலப்பு உலகப் பாரம்பரியத் தளங்கள் உள்ளன.
அதிகரித்து வரும் உப்புத் தன்மை, புயல்கள் மற்றும் கடல் மட்ட உயர்வு காரணமாக சுந்தரவனக்காடுகள் சதுப்புநிலச் சரிவை எதிர்கொள்கின்றன என்பதோடு இது பல்லுயிர் மற்றும் பாதுகாப்புச் சேவைகளைப் பாதிக்கிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைகள் சுரங்கம், கட்டுமானம் மற்றும் நிலப் பயன்பாட்டு மாற்றங்களால் நெருக்கடியில் உள்ளன என்ற நிலையில் இது சுற்றுச்சூழல் சம நிலையை அச்சுறுத்துகிறது.
நந்தா தேவி மற்றும் இமயமலை தேசியப் பூங்கா ஆகியவை பனிப்பாறை இழப்பு மற்றும் ஊடுருவல்/ஆக்கிரமிப்பு இனங்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன.