சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) 2025 ஆம் ஆண்டு உலகப் பாதுகாப்பு மாநாடு ஆனது ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியில் தொடங்கியது.
பல்லுயிர்ப் பெருக்க இழப்பு, பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவை எதிர்த்துப் போராடுவதற்கான அவசர கால உலகளாவிய நடவடிக்கை குறித்து இந்த மாநாடு கவனம் செலுத்துகிறது.
முக்கியத் தீர்மானங்களில் செயற்கை உயிரியல் கொள்கைகள், வணிக ரீதியான செல்லப் பிராணி வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் பாதுகாப்பிற்கான புதை படிவ எரிபொருள்களைப் படிப்படியாக நீக்குதல் ஆகியவை அடங்கும்.
சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் குற்றங்களை எதிர்த்துப் போராடுவது குறித்த புதிய உலகளாவிய வழிகாட்டுதல்களும் இதில் முன் வைக்கப் பட்டன.
2030 ஆம் ஆண்டிற்குள் பல்லுயிர்ப்பெருக்கம் மற்றும் பருவநிலை இலக்குகளை அடைவதற்காக உலகளாவிய ஒத்துழைப்பை விரைவுபடுத்துவதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.