காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் புலிகள் வளங்காப்பகத்தின் இயக்குனர் சோனாலி கோஷ் கென்டன் R. மில்லர் விருதைப் பெற்றார்.
தேசியப் பூங்காக்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் நிலைத் தன்மையில் புதுமைக்காக இந்த சர்வதேச விருதை வென்ற முதல் இந்தியர் இவர் ஆவார்.
IUCN அமைப்பின் ஒரு பகுதியாக உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகள் ஆணையம் (WCPA) ஆனது இந்த விருதை வழங்கியது.
கென்டன் R. மில்லர் விருது ஆனது, பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் திட்டமிடல், மேலாண்மை, நிர்வாகம் மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் புதுமைகளை அங்கீகரிக்கிறது.