TNPSC Thervupettagam

IUCN சுற்றுச்சூழல் மதிப்பீடு 2026

November 10 , 2026 4 days 91 0
  • எதிர்காலப் பெருங்கடல் வெப்பமடைதல் மற்றும் கடல் வெப்ப அழுத்தத்தைக் கருத்தில் கொண்டு, தெற்காசியாவில் உள்ள 13 பவளப்பாறை சுற்றுச்சூழல் மண்டலங்களையும் மிகக் கடுமையாக அச்சுறுத்தப்படுபவை (Critically Endangered) என 'IUCN சுற்றுச்சூழல் செந்நிறப் பட்டியல்' (IUCN Red List of Ecosystems) கீழ் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு வகைப்படுத்தியுள்ளது.
  • தெற்காசிய பவளப்பாறைகளின் சுற்றுச்சூழல் அமைப்புகளின் செந்நிறப் பட்டியல் மதிப்பீடு என்ற தலைப்பிலான இந்த ஆய்வறிக்கையை இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு நிறுவனத்தின் (ZSI) அறிவியலாளர்களும் இணைந்து எழுதியுள்ளனர்.
  • இந்தியா, வங்காளதேசம், இலங்கை, மாலத்தீவுகள் மற்றும் சாகோஸ் தீவுக்கூட்டம் முழுவதும் சுமார் 8,282.6 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்ட இந்த 13 சுற்றுச்சூழல் மண்டலங்கள், உலகின் பவளப்பாறை பரப்பளவில் சுமார் 4% ஐக் கொண்டுள்ளன.
  • அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள், மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீர்ச்சந்தி, மற்றும் கட்ச் வளைகுடா ஆகிய நான்கு பவளப்பாறை சுற்றுச்சூழல் மண்டலங்களை இந்தியா கொண்டுள்ளது.
  • கடந்த 50 ஆண்டுகளின் தரவுகளின் அடிப்படையில் மட்டுமே பார்க்கும்போது, ஏழு சுற்றுச்சூழல் மண்டலங்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடியவை (Vulnerable) எனவும், நான்கு அச்சுறுத்தப்பட்டபவை (Endangered) எனவும், இரண்டு மிகக் கடுமையாக அச்சுறுத்தப்படுபவை (Critically Endangered) எனவும் வகைப்படுத்தப்பட்டிருந்தன.
  • அடுத்த 50 ஆண்டுகளில் கணிக்கப்பட்ட கடல் வெப்ப அழுத்தத்தை உள்ளடக்கிய போது, அனைத்து 13 சுற்றுச்சூழல் மண்டலங்களும் மிகக் கடுமையாக அச்சுறுத்தப்படுபவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்