TNPSC Thervupettagam

IVFRT திட்டம் 2026–2031

March 28 , 2026 3 days 68 0
  • குடியேற்றம், விசா மற்றும் வெளிநாட்டினர் பதிவு ஆகியவற்றைக் கண்காணிக்கும் IVFRT (குடியேற்றம், விசா, வெளிநாட்டினர் பதிவு மற்றும் கண்காணிப்பு) திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தியாவின் குடியேற்ற அமைப்பை வலுப்படுத்த இத்திட்டம் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் மார்ச் 31, 2031 வரை தொடரும்.
  • IVFRT என்பது விசா, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் பதிவுச் செயல்முறைகளை நிர்வகிப்பதற்கான ஒரு ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமாகும்.
  • வெளிநாட்டினரின் வருகையை திறம்பட கண்காணிக்கவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் இது முதன்முதலில் 2010 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
  • இந்த நீட்டிக்கப்பட்ட காலக் கட்டத்தில், விரைவான குடியேற்ற அனுமதிக்கு மொபைல் சேவைகள் மற்றும் சுய-சேவை கியோஸ்க்குகள் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்