IWF உலக இளையோருக்கான பளு தூக்குதல் சாம்பியன்ஷிப்ஸ் 2018
July 11 , 2018 2559 days 872 0
தாஷ்கண்டில் 2018ம் ஆண்டு நடைபெற்ற IWF (International Weightlifting Federation) உலக இளையோருக்கான பளு தூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பளு தூக்குதல் வீராங்கனை ஜில்லி தலபெக்ரா வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார். இவர் 48 கிலோவுக்கான எடைப்பிரிவில் 167 கிலோ எடையைத் தூக்கி போட்டியில் மூன்றாவதாக நிறைவு செய்துள்ளார்.
இவர் இரண்டாவது பெண்மணியாக உலக இளையோருக்கான சாம்பியன்ஷிப்பில் பதக்கத்தினை வென்றுள்ளார். இதற்கு முன்னர் சாய்க்கோம் மீராபாய் சனு 2013-ல் பதக்கம் வென்றுள்ளார்.