வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026, மக்களவையால் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 அன்று நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் (JPC) பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.
ஒரு நாடாளுமன்றக் கூட்டுக்குழுவில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இடம் பெற்றிருப்பர், இது ஒரு குறிப்பிட்ட மசோதா அல்லது சிக்கலை விரிவாக ஆராய்கிறது.
இது சாட்சிகளை அழைக்கலாம், ஆவணங்களை ஆய்வு செய்யலாம் மற்றும் மாற்றங்களைப் பரிந்துரைக்கலாம், ஆனால் அதன் பரிந்துரைகள் அரசாங்கத்தை கட்டுப்படுத்தாது.
விரிவான ஆய்வு மற்றும் பங்குதாரர்களின் ஆலோசனை மூலம் சிக்கலான சட்டங்களை ஆராய நாடாளுமன்றக் குழுக்கள் உதவுகின்றன.
14வது மக்களவையில் (2004-09) சுமார் 60 சதவீத மசோதாக்கள் குழுக்களுக்கு அனுப்பப் பட்டன, ஆனால் இது 17வது மக்களவையில் (2019-24) சுமார் 16 சதவீதமாகக் குறைந்தது.