Jupiter Icy Moon Explorer – ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்
May 18 , 2021 1552 days 691 0
ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தினால் அனுப்பப்பட்ட Jupiter Icy Moon Explorer என்ற விண்கலமானது சமீபத்தில் முக்கியமான தொடர் சோதனைகளில் ஈடுபடுத்தப் பட்டு உள்ளது.
இது JUICE (Jupiter Icy Moon Explorer) என அழைக்கப்படுகிறது.
இது ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட கோள்களுக்கிடையே இயக்கப் படும் ஒரு விண்கலமாகும்.
இது இன்னும் அதன் கட்டுமானப் பணிநிலையில் தான் உள்ளது.
இத்திட்டத்திற்கான முதன்மையான ஒப்பந்ததாரர் நிறுவனம் ஏர்பஸ் டிஃபென்ஸ் மற்றும் ஸ்பேஸ் (Airbus Defence and Space) எனும் நிறுவனம் ஆகும்.
JUICE ஆய்வுக் கலமானது வியாழனின் மூன்று கலிலிய துணைக் கோள்களை ஆய்வுச் செய்யும்.
அவை யுரோப்பா, கனிமேடே மற்றும் கலிஸ்டோ (Europa, Ganymede and Callisto) ஆகியன ஆகும்.
இந்த மூன்று துணைக் கோள்களும் அவற்றின் மேற்பரப்புக்கு அடிப்பகுதியில் கணிசமான அளவில் நீரினைக் கொண்டுள்ளன.
இந்த விண்கலமானது 2022 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் விண்ணில் ஏவப்படும்.
இது 2029 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வியாழனைச் சென்றடையும்.
இது ஐந்து விதமான ஈர்ப்புச் சக்திக் கருவியின் உதவியுடன் வியாழனைச் சென்று அடையும்.
ஈர்ப்புச் சக்தி உதவி என்பது மற்றொரு கோளின் (அ) விண்வெளிப் பொருளின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி ஒரு விண்கலத்தின் வேகத்தை அதிகரித்தல் (அ) பாதையை மாற்றுதல் என்பதாகும்.
இது உந்துபொருளை (propellant) சேமிக்கவும் அதன் செலவினைக் குறைக்கவும் வேண்டி பயன்படுத்தப்படுகிறது.