வங்காள விரிகுடாவில் உள்ள அதன் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான INS அரிகாட்டில் இருந்து K-4 இடைநிலைத் தாக்குதல் வரம்பு கொண்ட உந்து விசை எறிகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது.
இந்த எறிகணை சோதனையானது விசாகப் பட்டினம் கடற்கரையில் நடத்தப்பட்டது.
திட எரிபொருளால் இயக்கப்படுகின்ற K-4 எறிகணை, 3,500 கிமீ தாக்குதல் வரம்பைக் கொண்டுள்ளது என்பதோடுமேலும் இரண்டு டன் வரை எடையுள்ள அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் திறன் கொண்டது.
INS அரிகாட் என்பது இந்தியாவின் இரண்டாவது அணுசக்தியால் இயங்கும் உந்து விசை எறிகணை தாங்கும் நீர்மூழ்கிக் கப்பல் (SSBN) ஆகும் என்பதோடுஇது உத்தி சார் படைப் பிரிவினால் இயக்கப்படுகிறது.