K-4 எறிகணையானது, ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விசாகப் பட்டினத்தில் ஐஎன்எஸ் அரிகாத் என்ற நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து பரிசோதிக்கப் பட்டது.
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் வகையிலான ஒரு உந்துவிசை எறிகணையின் (SLBM) சோதனையானது நீர்மூழ்கிக் கப்பலில் மேற்கொள்ளப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
இந்த எறிகணைச் சோதனையின் மூலம், நிலம், வான் மற்றும் கடலுக்கு அடியில் இருந்து அணு சக்தி சார்ந்த எறிகணையை ஏவக்கூடிய குறிப்பிட்ட சில நாடுகளின் ஒரு பகுதியாக இந்தியாவும் மாறியுள்ளது.