TNPSC Thervupettagam
July 2 , 2025 13 hrs 0 min 30 0
  • K-6 எனப்படும் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவப்படும் வகையிலான அணுசக்தி திறன் கொண்ட அதி மீயொலி எறிகணையினை இந்தியா உருவாக்கி வருகிறது.
  • இது ஐதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் மேம்பட்ட கடற்படை அமைப்புகள் ஆய்வகத்தால் கட்டமைக்கப்படுகிறது.
  • K-6 எறிகணையானது 7.5 மேக் (மணிக்கு சுமார் 9,261 கிலோ மீட்டர்) வரையிலான அதி மீயொலி வேகத்தையும் 8,000 கிலோ மீட்டர் வரை சென்று தாக்கக் கூடியத் திறனையும் கொண்டுள்ளது.
  • இது அணு ஆயுதங்கள் அல்லது மரபுசார் ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடியது.
  • இதில் ஒரு எறிகணை மூலம் பல இலக்குகளைத் தாக்கும் MIRV தொழில்நுட்பத்துடன் பொருத்தப் பட்டுள்ளது.
  • இந்தியா ஏற்கனவே சுமார் 1,000 முதல் 6,000 கிலோ மீட்டர்கள் வரை செல்லக் கூடிய K-3, K-4 மற்றும் K-5 போன்ற முந்தைய SLBM வகையான எறிகணைகளைப் பரிசோதித்துப் பயன்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்