TNPSC Thervupettagam

K நுழைவு இசைவுச் சீட்டு – சீனா

September 28 , 2025 2 days 27 0
  • வெளிநாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திறமைகளை ஈர்ப்பதற்காக சீன அரசானது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதி முதல் புதிய K நுழைவு இசைவுச் சீட்டினை அறிமுகப்படுத்த உள்ளது.
  • இந்த நுழைவு இசைவுச் சீட்டு STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) துறைப் பட்டதாரிகள் மற்றும் சிறந்த உலகளாவிய நிறுவனங்களின் நிபுணர்களை இலக்காகக் கொண்டுள்ளது.
  • K நுழைவு இசைவுச் சீட்டு வைத்திருப்பவர்கள் தளர்வுகள் மிகுந்த நுழைவு, நீட்டிக்கப் பட்ட செல்லுபடியாகும் தன்மை மற்றும் ஆராய்ச்சி, கல்வி மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றில் பரந்தச் செயல்பாட்டு நோக்கம் ஆகியவற்றினால் பயனடைவார்கள்.
  • இந்த நுழைவு இசைவுச் சீட்டு சீன முதலாளிகளிடமிருந்துப் பெற வேண்டிய நிதி உதவித் தொகைக்கான (ஸ்பான்சர்ஷிப்) தேவையை நீக்குகிறது.
  • K நுழைவு இசைவுச் சீட்டு ஆனது 2013 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட உயர் மட்ட திறமையாளர்களுக்கான தற்போதைய R நுழைவு இசைவுச் சீட்டு வசதியினை அடிப்படையாகக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்