K2-18b புறக்கோளில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள்
May 4 , 2025 108 days 119 0
வானியலாளர்கள் K2-18b என்ற புறக்கோளில் உயிரியல் செயல்பாடுகளுடன் தொடர்பு உடைய ஒரு மிகச் சாத்தியமான உயிரியல் அடையாளங்கள் அல்லது கடந்த காலத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான அல்லது தற்போது உயிர்கள் வாழ்வதற்கான பல்வேறு அறிகுறிகளைக் கண்டறிந்துள்ளனர்.
இந்த K2-18b என்ற புறக்கோளின் வளிமண்டலத்தில் டைமெத்தில் சல்பைடு அல்லது DMS இருப்பதையும், டைமெத்தில் டைசல்பைடு அல்லது DMDS இருப்பதையும் அக்குழு கண்டறிந்துள்ளது.
பூமியில், இரண்டு மூலக்கூறுகளும், பொதுவாக கடல் வாழ் பைட்டோபிளாங்க்டன் எனப்படும் நுண்ணுயிரிகளால் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.
பூமியிலிருந்து 124 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள K2-18b புறக்கோளானது ஒரு ஹைசியன் உலகமாக (திரவ நீர் கொண்ட பெருங்கடல் மற்றும் ஹைட்ரஜன் நிறைந்த வளிமண்டலம்) இருக்கலாம்.
இந்த சாத்தியமான வாழக்கூடிய கிரகம் ஆனது ஹைட்ரஜன் வாயுவால் நிறைந்த வளிமண்டலத்துடன் கூடியதாகவும் முழுமையாக திரவ நீரினால் சூழப்பட்டதாகவும் உள்ளது.