TNPSC Thervupettagam

K2-18b புறக்கோளில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள்

May 4 , 2025 16 days 56 0
  • வானியலாளர்கள் K2-18b என்ற புறக்கோளில் உயிரியல் செயல்பாடுகளுடன் தொடர்பு உடைய ஒரு மிகச் சாத்தியமான உயிரியல் அடையாளங்கள் அல்லது கடந்த காலத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான அல்லது தற்போது உயிர்கள் வாழ்வதற்கான பல்வேறு அறிகுறிகளைக் கண்டறிந்துள்ளனர்.
  • இந்த K2-18b என்ற புறக்கோளின் வளிமண்டலத்தில் டைமெத்தில் சல்பைடு அல்லது DMS இருப்பதையும், டைமெத்தில் டைசல்பைடு அல்லது DMDS இருப்பதையும் அக்குழு கண்டறிந்துள்ளது.
  • பூமியில், இரண்டு மூலக்கூறுகளும், பொதுவாக கடல் வாழ் பைட்டோபிளாங்க்டன் எனப்படும் நுண்ணுயிரிகளால் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.
  • பூமியிலிருந்து 124 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள K2-18b புறக்கோளானது ஒரு ஹைசியன் உலகமாக (திரவ நீர் கொண்ட பெருங்கடல் மற்றும் ஹைட்ரஜன் நிறைந்த வளிமண்டலம்) இருக்கலாம்.
  • இந்த சாத்தியமான வாழக்கூடிய கிரகம் ஆனது ஹைட்ரஜன் வாயுவால் நிறைந்த வளிமண்டலத்துடன் கூடியதாகவும் முழுமையாக திரவ நீரினால் சூழப்பட்டதாகவும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்