பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயதான மலையேறும் வீரர் ஓருவர் K2 சிகரத்தினை ஏறிய உலகின் இளம் வயது வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.
K2 சிகரமானது உலகின் இரண்டாவது உயரமான சிகரமாகும்.
லாகூரைச் சேர்ந்த செஹ்ரோஷ் காசிப் என்பவர் ஒரு குடுவையில் நிரப்பப் பட்ட ஆக்சிஜனின் உதவியோடு 8611 மீட்டர்உயரம் கொண்ட அந்தச் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
பாகிஸ்தான், நேபாளம் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உலகின் 14 உயரிய சிகரங்கள் அமைந்துள்ளன, இவை 8000ers எனவும் அழைக்கப்படுகின்றன.
K2 மற்றும் நங்க பர்வதம் உள்ளிட்ட ஐந்து 8000 மீட்டர் உயர சிகரங்கள் பாகிஸ்தானில் அமைந்துள்ளன.