TNPSC Thervupettagam

KABIL லித்தியம் திட்டம்

June 11 , 2026 3 days 132 0
  • அர்ஜென்டினாவின் கட்டமார்கா மாகாணத்தில் உள்ள லித்தியம் உவர்நீர் படிவுகளை ஆழமாக ஆய்வு செய்வதற்காக கனிஜ் பிதேஷ் இந்தியா லிமிடெட் (KABIL) ஐந்து லித்தியம் தொகுதிகளைப் பெற்றுள்ளது.
  • KABIL என்பது சுரங்கத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (NALCO), ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (HCL) மற்றும் மினரல் எக்ஸ்ப்ளோரேஷன் அண்ட் கன்சல்டன்சி லிமிடெட் (MECL) ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாகும்.
  • இந்தத் தொகுதிகள் அர்ஜென்டினா, பொலிவியா மற்றும் சிலி ஆகிய நாடுகளின் 'லித்தியம் முக்கோணப் பகுதியில்' சுமார் 15,703 ஹெக்டேர் பரப்பளவை உள்ளடக்கி உள்ளன.
  • தோண்டுதல் மற்றும் ஆய்வுகள் உள்ளிட்ட ஆய்வு நடவடிக்கைகளுக்காக 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அர்ஜென்டினாவிடம் இருந்து KABIL நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்றது.
  • இதுவே இந்தியாவின் முதல் அரசு தலைமையிலான வெளிநாட்டு லித்தியம் ஆய்வு மற்றும் சுரங்கத் திட்டமாகும்.
  • இத்தொகுதிகளில் இருந்து 2029 ஆம் ஆண்டு வாக்கில் வணிக ரீதியான உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்