“KBL SB - TASC” என்ற புதிய வங்கி சேமிப்புத் திட்டம் - கர்நாடக வங்கி துவக்கம்
November 21 , 2018 2587 days 890 0
2018 ஆம் ஆண்டு நவம்பர் 15 முதல் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 வரை 2018-19 ஆம் ஆண்டிற்கான நடப்புக் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்கு திட்டங்களுக்கான பரப்புரையை கர்நாடக வங்கி ஆரம்பித்திருக்கின்றது.
மேலும் இவ்வங்கி அறக்கட்டளைகள் / நிறுவனங்கள் / சங்கங்கள் / கழகங்கள் ஆகியவற்றுக்கான பிரத்தியேகத் தயாரிப்பாக “KBL SB - TASC” என்ற புதிய வங்கி சேமிப்புத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது.
நாடு முழுவதுமான இந்த பரப்புரையின் கீழ் இவ்வங்கியானது, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து 823 கிளைகளிலும் உள்ள 8000க்கும் மேற்பட்ட பணியாளர்களின் சுறுசுறுப்பான பங்களிப்பு மூலம் 4.18 லட்சத்திற்கும் மேல் நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்குகளைத் துவங்கத் திட்டமிட்டு இருக்கின்றது.