TNPSC Thervupettagam

Khuarel செயலி – மிசோரம்

May 9 , 2026 16 hrs 0 min 24 0
  • பேரிடர்களை நிகழ்நேரத்தில் தெரிவிப்பதையும் மற்றும் பேரிடர் காலங்களில் விரைந்து செயல்படுவதையும் வலுப்படுத்தும் நோக்கில் மிசோரம் மாநிலம் 2026 ஆம் ஆண்டில் 'குவாரல்' மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது.
  • இந்தச் செயலி ஐஸ்வாலில் பேரிடர் மேலாண்மை மற்றும் மறுவாழ்வுத் துறை (DM&R) அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.
  • அவசரகாலங்களில் விரைவாகச் செயல்படுவதற்கான நிகழ்நேரப் பேரிடர் தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • குடிமக்கள் பேரிடர்கள் குறித்து விரைவாகப் புகாரளிக்க இச்செயலி அனுமதிக்கிறது என்பதோடு மாநில மற்றும் மாவட்டப் பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் (SDMA மற்றும் DDMA) மூலம் மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கவும் இது அதிகாரிகளுக்கு உதவுகிறது.
  • இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படும் பேரிடர்களின் போது தகவல் தொடர்பு, ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதை இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்தகைய டிஜிட்டல் பேரிடர் மேலாண்மை அமைப்பைப் பின்பற்றும் வடகிழக்கு இந்தியாவின் முதல் மாநிலங்களில் மிசோரமும் ஒன்றாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்