Kids Rights அமைப்பின் குழந்தைகளுக்கான சர்வதேசப் பரிசு – 2021
November 24 , 2021 1485 days 662 0
டெல்லியைச் சேர்ந்த இரண்டு இளம் வயது சகோதரர்களான விஹான் (17) மற்றும் நவ் அகர்வால் (14) ஆகியோருக்கு 17வது குழந்தைகளுக்கான சர்வதேச அமைதிப் பரிசு என்பது வழங்கப் பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான வீடுகள், பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து பெறப்படும் குப்பைகளைப் பிரித்தெடுப்பதற்கும் அவற்றை அகற்றுவதற்கும் “One Step Greener” என்ற ஒரு முன்னெடுப்பினை அவர்கள் உருவாக்கினர்.
இந்தப் பரிசானது நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் அமைந்துள்ள KidsRights எனப்படும் ஒரு சர்வதேசக் குழந்தைகள் உரிமை அமைப்பினால் ஆண்டுதோறும் வழங்கப் படுகிறது.