சண்டிகர் பல்கலைக்கழகம் ஆனது தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாக கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு (KIUG) போட்டிகள் பட்டத்தை வென்ற இந்தியாவின் முதல் பல்கலைக்கழகமாக மாறியது.
இராஜஸ்தானில் நடைபெற்ற KIUG 2025 போட்டியில், இந்தப் பல்கலைக்கழகம் 42 தங்கம், 14 வெள்ளி மற்றும் 11 வெண்கலம் உட்பட மொத்தம் 67 பதக்கங்களை வென்றது.
கேனோயிங் (படகோட்டம்) மற்றும் கயாக்கிங் ஆகிய போட்டிகள் KIUG 2025 போட்டிகளில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டன என்பதோடுஇந்தப் பிரிவுகளில் சண்டிகர் பல்கலைக்கழகம் 23 தங்கப் பதக்கங்களை வென்றது.