புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) ஆனது "Know Your Survey -உங்கள் கணக்கெடுப்பை அறிந்து கொள்ளுங்கள்" என்ற தலைப்பில் அதன் முதல் வாசகருக்கு உகந்த வகையிலான வழிகாட்டியை வெளியிட்டுள்ளது.
இந்த வழிகாட்டியை தேசியப் புள்ளிவிவர அலுவலகம் (NSO) வெளியிட்டுள்ளது.
இது ஒருங்கிணைக்கப்படாத துறை நிறுவனங்களின் (ASUSE) வருடாந்திர கணக்கெடுப்பை எளிய மற்றும் நுட்பம் சாராத வழியில் விளக்குகிறது.
இந்த வெளியீடானது கணக்கெடுப்புப் பரவல், வழிமுறை மற்றும் தர உறுதி செயல் முறையை விவரிக்கிறது.
கணக்கெடுப்பில் பதிலளிப்பவர்களுக்குத் தரவுச் சேகரிப்பு நடைமுறைகள் மற்றும் இரகசியத்தன்மைப் பாதுகாப்புகள் குறித்து இது தெரிவிக்கிறது.