கேந்திரியா வித்யாலயா சங்கதனின் (Kendriya Vidyalaya Sangathan - KVS) பெரும் கலாச்சார மற்றும் இலக்கிய நிகழ்வான ஒரே பாரதம் வளமான பாரதம் நிகழ்வு புதுடில்லியில் நிறைவடைந்தது.
இதை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் கேந்திரிய வித்யாலயா சங்கதன் ஏற்பாடு செய்துள்ளது.
ஒரே பாரதம் வளமான பாரதம் பிரிவின் கீழ் ஒட்டுமொத்த வெற்றியாளராக கொல்கத்தா பிராந்தியம் முதல் இடத்தைப் பிடித்தது.
சர்தார் வல்லபாய் படேலின் 140வது பிறந்த நாளை முன்னிட்டு “ஒரே பாரதம் வளமான பாரதம்” திட்டமானது 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று பிரதமரால் அறிவிக்கப் பட்டது.
இது மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு திட்டமாகும்.