இந்தியாவில் பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நன்கு விரிவு படுத்தச் வதற்காக, எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவனம் (TERI) புது தில்லியில் LaBL 2.0 (Lighting a Billion Lives 2.0) முன்னெடுப்பைத் தொடங்கியது.
இது கிராமப்புற மற்றும் மின்சார வசதி இல்லாத பகுதிகளில் சூரிய சக்தி போன்ற பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (DRE) தீர்வுகளை ஊக்குவிக்கிறது.
இது 2008 ஆம் ஆண்டு TERI நிறுவனத்தால் முதன்முதலில் தொடங்கப்பட்ட 'Lighting a Billion Lives' திட்டத்தின் இரண்டாம் கட்டமாகும்.
இந்தத் திட்டம் தூய்மையான எரிசக்தி வசதி, கிராமப்புற வாழ்வாதாரங்கள் மற்றும் பெண்களால் வழி நடத்தப்படும் தூய்மையான எரிசக்தி நிறுவனங்களை ஆதரிக்கிறது.
பருவநிலை நன்மைகள் மற்றும் கார்பன் உமிழ்வு குறைப்புகளை அளவிடுவதற்கு இது கண்காணிப்பு, அறிக்கை மற்றும் சரிபார்ப்பு (MRV) அமைப்புகளைப் பயன்படுத்துகிறது.