TNPSC Thervupettagam

LAHDC திருத்த விதிமுறைகள் 2026

October 22 , 2026 14 hrs 0 min 20 0
  • லடாக்கின் அனைத்து எட்டு மாவட்டங்களிலும் மலை சபைக்கான தேர்தல்களுக்கு வழிவகுக்கும் வகையில் லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டுச் சபைகள் (LAHDC) (திருத்தம்) ஒழுங்குமுறை 2026-ஐ குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிரகடனப் படுத்தினார்.
  • 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 14 அன்று இந்தத் திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  • ஒவ்வொரு சபையிலும் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை 26 லிருந்து குறைந்தபட்சம் 7 ஆகவும் அதிகபட்சம் 24 ஆகவும் இவ்விதிமுறை மாற்றுகிறது.
  • உள்ளாட்சி நிர்வாகத்தில் பங்கேற்பை மேம்படுத்துவதற்காக பெண்கள் மற்றும் பிரதிநிதித்துவமில்லாத சமூகங்களில் இருந்து நான்கு உறுப்பினர்களை நியமனம் செய்ய இது வகை செய்கிறது.
  • லடாக் கடந்த 2019 ஆம் ஆண்டில் முந்தைய ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்ட பிறகு ஓர் ஒன்றியப் பிரதேசமாக மாறியது. இதற்கு முன்பு லே மற்றும் கார்கில் ஆகிய இரண்டு இடங்களில் மலை சபைகளைக் கொண்டிருந்தது.
  • புதிதாக உருவாக்கப்பட்ட சங்கு (Sankoo) மாவட்டமும் அனைத்து எட்டு மாவட்டங்களிலும் மலை சபைகளை நிறுவும் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்