இந்திய ராணுவமும் செசல்ஸ் நாட்டின் பாதுகாப்புப் படையும் இணைந்து செசல்சிலுள்ள செசல்ஸ் பாதுகாப்பு அகாடமியில் LAMITIYE – 2022 எனப்படும் 9வது கூட்டு இராணுவப் பயிற்சியினை மேற்கொண்டன.
இந்தப் பயிற்சியில் இந்திய இராணுவம், செசல்ஸ் பாதுகாப்புப் படை மற்றும் நிறுவன தலைமைத்துவம் ஒன்றிணைந்து ஈடுபடுகின்றன.
பகுதியளவு நகர்ப்புறச் சுற்றுச்சூழலில் எதிர்ப்படைகளுக்கு எதிராக மேற்கொள்ளப் பட்ட பல்வேறு நடவடிக்கைகளிலிருந்து பெற்ற அனுபவங்களைப் பகிர்வதும் கூட்டு நடவடிக்கைகளை நடத்துவதற்கான திறன்களை மேம்படுத்தச் செய்வதுமே இந்தப் பயிற்சியின் ஒரு நோக்கமாகும்.
இந்திய ராணுவத்தின் படைப்பிரிவில் 2/3 கோர்கா ரைபில்ஸ் குழுவினை (PIRKANTHI படைப் பிரிவு) சேர்ந்த வீரர்கள் அடங்குவர்.