TNPSC Thervupettagam
October 26 , 2025 10 days 28 0
  • LCA (இலகுரக போர் விமானம்) தேஜாஸ் Mk1A ஆனது, அதன் முதல் பறத்தல் பயிற்சியினை HAL நிறுவனத்தின் (இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்) நாசிக் மையத்தில்  மேற்கொண்டது.
  • பாதுகாப்புத் துறை அமைச்சகமானது LCA Mk1A விமானத்திற்கான மூன்றாவது உற்பத்தி தொடரினையும் HTT-40 (இந்துஸ்தான் டர்போ டிரெய்னர்-40) விமானத்திற்கான இரண்டாவது உற்பத்தித் தொடரினையும் தொடங்கி வைத்தது.
  • இந்த விமானம் GE ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் F404–IN20 எஞ்சின் மூலம் இயக்கப் படுகிறது.
  • நாசிக் மையமானது ஆண்டுதோறும் எட்டு விமானங்களை உற்பத்தி செய்யக் கூடியது, இது HAL நிறுவனத்தின் மொத்த உற்பத்தித் திறனை ஆண்டிற்கு 24 LCA Mk1A விமானங்களாக உயர்த்தும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்