LCA (இலகுரக போர் விமானம்) தேஜாஸ் Mk1A ஆனது, அதன் முதல் பறத்தல் பயிற்சியினை HAL நிறுவனத்தின் (இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்) நாசிக் மையத்தில் மேற்கொண்டது.
பாதுகாப்புத் துறை அமைச்சகமானது LCA Mk1A விமானத்திற்கான மூன்றாவது உற்பத்தி தொடரினையும் HTT-40 (இந்துஸ்தான் டர்போ டிரெய்னர்-40) விமானத்திற்கான இரண்டாவது உற்பத்தித் தொடரினையும் தொடங்கி வைத்தது.
இந்த விமானம் GE ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் F404–IN20 எஞ்சின் மூலம் இயக்கப் படுகிறது.
நாசிக் மையமானது ஆண்டுதோறும் எட்டு விமானங்களை உற்பத்தி செய்யக் கூடியது, இது HAL நிறுவனத்தின் மொத்த உற்பத்தித் திறனை ஆண்டிற்கு 24 LCA Mk1A விமானங்களாக உயர்த்தும்.