TNPSC Thervupettagam
October 18 , 2022 1037 days 518 0
  • 2022 ஆம் ஆண்டிற்கான LEADS (பல்வேறு மாநிலங்கள் முழுவதும் தளவாட வழங்கீடுகளை எளிதாக்குதல்) அறிக்கையினை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகமானது சமீபத்தில் வெளியிட்டது.
  • மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் நான்கு பெரிய வகைகளின் கீழ் கடலோர மாநிலங்கள், உள்நாடு/நிலத்தினால் சூழப்பட்ட மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் ஆகிய நிலைகளில் வகைப்படுத்தப் பட்டுள்ளன.
  • இது மூன்று செயல்திறன் வகைப்பாடுகளை வழங்குகிறது.
    • சாதனையாளர்கள் - 90 சதவீதம் அல்லது அதற்கு மேல் சாதனை அடையும் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள்
    • வேகமாக முன்னேறி வருபவை - 80 முதல் 90 சதவிகிதம் சாதனை அடையும் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும்
    • இலட்சியமிக்கவை - 80 சதவீதத்திற்கும் குறைவான மதிப்பெண் பெற்ற மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள்.
  • 15 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் சாதனையாளர்களாக வகைப் படுத்தப் பட்டுள்ளன.
  • ஆந்திரப் பிரதேசம், அசாம், சண்டிகர், டெல்லி, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் மேற்கண்ட குழுவில் இடம் பெற்றுள்ளன.
  • சமீபத்திய அறிக்கையில் கேரளா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், புதுச்சேரி, சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகியவை வேகமாக முன்னேறி வருபவையாக வகைப் படுத்தப் பட்டுள்ளன.
  • 15 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் இலட்சியமிக்கவையாக வகைப் படுத்தப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்