மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகமானது, 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதியன்று புது டெல்லியில் பல்வேறு மாநிலங்களில் தளவாடக் கையாளுதலை எளிதாக்குதல் (LEADS) 2025 கணக்கெடுப்பினை அறிமுகப்படுத்தியது.
LEADS 2025 ஆனது இந்தியாவின் மேக் இன் இந்தியா மற்றும் ஆத்மநிர்பர் பாரத் முன்னெடுப்புகளை ஆதரிப்பதற்காக, மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் தளவாட செயல்திறன்களுக்கு அளவுருக்களை நிர்ணயிக்கிறது.
இந்தக் கணக்கெடுப்பு ஆனது சிறந்த நடைமுறைகளை அடையாளம் காட்டுகிறது, மேம்படுத்தப்பட வேண்டிய பகுதிகளை குறிப்பிட்டு காட்டுகிறது மற்றும் தளவாட செலவுகளைக் குறைப்பதற்கும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்குமான ஒத்துழைப்பைச் செயல்படுத்துகிறது.
பயண நேரம், சரக்குந்தின் வேகம் மற்றும் காத்திருப்பு காலங்களை அடிப்படையாகக் கொண்ட வழித்தடச் செயல்திறன் மதிப்பீடுகள் மற்றும் முக்கிய சாலைப் பிரிவுகளில் API மூலம் இயக்கப்பட்ட வேக மதிப்பீடுகள் ஆகியவை இதன் புதிய அம்சங்களில் அடங்கும்.