TNPSC Thervupettagam

LEADS அறிக்கை 2019

September 16 , 2019 2116 days 895 0
  • வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் புதுடெல்லியில் நடைபெற்ற பொருள்களின் இயக்கம் மற்றும் செயல்திறன் குறித்த கருத்து அடிப்படையிலான குறியீடு மீதான (LEADS – வெவ்வேறு மாநிலங்களுக்கு இடையிலான எளிய சரக்குப் போக்குவரத்து) இரண்டாவது பதிப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
  • இந்த அறிக்கையில் குஜராத் முதலிடத்திலும், பஞ்சாப் மற்றும் ஆந்திரப் பிரதேசம் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களிலும் உள்ளன.
  • யூனியன் பிரதேசங்களில் சண்டிகர் முதலிடத்திலும், டெல்லி மற்றும் புதுச்சேரி முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களிலும் உள்ளன.
  • மலைப்பாங்கான கிழக்கு மாநிலங்களில் திரிபுரா முதலிடத்திலும், இமாச்சலப் பிரதேசம் தர வரிசையில் கடைசியாக 22வது இடத்திலும் உள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு குறியீட்டு வரிசையில் முதல் மூன்று இடங்களில் உள்ள மாநிலங்கள் முந்தைய ஆண்டின் குறியீட்டிலும் அதே நிலையை வகித்தன.
  • இந்த குறியீடு ஆனது வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சத்தால் டிலோய்ட் டோஸ்ச் டோமஸ்சு லிமிடெட் கம்பெனியுடன் இணைந்து மேம்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்