மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமானது இரண்டு புதிய முன்முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
கல்வியாளர்களுக்கான தலைமைத்துவத் திட்டம் (Leadership for Academicians Programme -LEAP)
உயர்கல்வி ஆசிரியர்களுக்கு கற்பித்தலில் வருடாந்திரப் புத்துணர்ச்சியூட்டல் (Annual Refresher Programme In Teaching-ARPIT)
APRIT ஆனது SWAYAM என்ற இணையதளம் மூலமாக மிகப்பெரிய அளவில் திறந்த நிலையிலான நேரடி அல்லது ஆன்லைன் படிப்புகள் உதவியுடன் 1.5 லட்சம் உயர்கல்வி ஆசிரியர்களுக்கு இணையதளத்தில் அல்லது ஆன்லைனில் தொழில்சார் மேம்பாட்டை அளிக்கும் முக்கியமான மற்றும் தனித்தன்மை வாய்ந்த முன்முயற்சியாகும்.
LEAP என்பது பொது நிதியளிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் 2 வது நிலையிலுள்ள கல்வியாளர்களுக்கான 3 வாரகால தலைமைத்துவ மேம்பாட்டு பயிற்சித் திட்டமாகும்.
இதன் முக்கிய கோளானது எதிர்காலத்தில் தலைமை பொறுப்புகளை வகிக்க வாய்ப்புள்ள இரண்டாம் நிலை கல்வியியல் தலைவர்களை உருவாக்குவது ஆகும்.